மொறுமொறுப்பான காளான் 65 ரெசிப்பி!!

106585ca26e0a63cc821b3d397ffef73

பொதுவாக 65 ரெசிப்பி என்றால், சிக்கன் மற்றும் மட்டனில்தான் செய்து சாப்பிடுவோம், இப்போது நாம் காளானில் 65 ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையானவை:
காளான் – கால் கிலோ
கடலை மாவு – 2 ஸ்பூன்
கான்ப்ளவர் மாவு – 1 1/2 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தனியாத் தூள் – 2 ஸ்பூன்
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    காளானை சுத்தம் செய்து நன்கு கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். 
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, கான்பிளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் காளான் சேர்த்து ஊறவைக்கவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காளானைப் போட்டு பொரித்து காளான் 65 ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews