ஹோட்டல் ஸ்டையில் மொறு மொறு தோசை வேணுமா? இப்படி பண்ணுங்க!

நாம் என்ன தான் வீட்டுல தோசை பண்ணினாலும் ஹோட்டல் ஸ்டையில் கிரிஸ்பியான தோசை வீட்டுல வராது, அது எப்படி பண்ணுறதுனு பாக்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி – ஒரு கப்,
புழுங்கலரிசி – ஒரு கப்,
உளுந்து – கால் கப்,
கடலைப்பருப்பு – சிறிதளவு,
வெந்தயம் – ஒரு டீஸ்புன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும் .பின்னர் கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.இந்த முறையில் தயார் செய்த மாவை உடனடியாக தோசை வார்க்கலாம்.. மிகவும் சுவையான தோசை கிடைக்கும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

இந்த தோசை மாவை மசால் தோசைக்கு உபயோகித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்த்து, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.இந்த முறைப்படி செய்தால் நிஜமாகவே ஹோட்டல் தோசை டேஸ்ட் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews