மொறுமொறு வாழைப்பூ பக்கோடா ரெசிப்பி!!

1d324f75c442fed604a0c578313e3756-1-2

பொதுவாக பக்கோடா ரெசிப்பி என்றால் வெங்காயத்தில்தான் செய்வோம். இப்போது நாம் வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ – 1
வெங்காயம் – 2
கடலைமாவு – 2 கப்
அரிசி மாவு – முக்கால் கப்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு, 
கறிவேப்பிலை – தேவையான அளவு
சோம்பு- 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

1. வாழைப்பூவின் நரம்புகளை நீக்கி, இதனை நறுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் வாழைப்பூ, கடலை மாவு, மிளகாய்த் தூள், சோம்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, அரிசி மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து தண்ணீர் மற்றும் எண்ணெய்விட்டு நன்கு  பிசையவும்.
4. இந்தக் கலவையை 10 நிமிடம் ஊறவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பொரித்து எடுத்தால் வாழைப்பூ பக்கோடா ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews