Connect with us

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானது-ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்!!

crypto curr 1024

செய்திகள்

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானது-ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்!!

உலக அளவில் கிரிப்டோ கரன்சிகளின் மோகம் அதிகரிக்கிறது. இவை நம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டே தான் வருகிறது. இந்த கிரிப்டோ கரன்சிகளின் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில மும்பையில் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்று கூறியுள்ளார்.

நிதி சார்ந்த அமைப்புகளில் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்த நிலையில் இணைய வழி குற்றங்களும் அதிகரித்துள்ளது என்றும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். இணைய வழி குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது பணம் வீக்கம் போன்றவை கவனமாக கையாளப்படுகிறது என்றும் சக்தி காந்ததாஸ் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top