குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; ஐகோர்ட் கிளை அதிரடி!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில் புதுக்கோட்டை வேங்கைவயலில் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்ததால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் எதிரொலியாக அம்மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததில் இரட்டை குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. இது போன்ற தீண்டாமை கொடுமைகள் பல கிராமங்களில் நடைப்பெற்று வருவதால் ஆய்வு செய்ய குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை!!

அதே போல் பாதிக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்டுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்க வழக்கு தொரடப்பட்ட நிலையில் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் விஜயகுமார் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வியெழுப்பினர். அப்போது இரட்டை குவளை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்புடன் கரும்பு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

இதனையடுத்து குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என கூறி நீதிபதிகள் வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சமூக நீதி துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.