Connect with us

வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!: பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

செய்திகள்

வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!: பள்ளிக்கல்வித்துறை

வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!: பள்ளிக்கல்வித்துறை

இன்றைய தினம் நம் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றது. இந்த திருப்புதல் தேர்வு பள்ளி கல்வித் துறைக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காணப்பட்டது. ஏனென்றால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்றைய தினமே வெளியே கசிந்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் நேற்று கசிந்தது. அதன்பின்னர் இன்று சென்னையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையை சமர்பித்த பின்பு மற்றுமொரு அதிர்ச்சியான நிகழ்வு சற்று முன்பு அரங்கேறியுள்ளது. அதன்படி நாளை நடக்க உள்ள சமூக அறிவியல் வினாத்தாள் இன்றே கசிந்து உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனால் விரக்தியடைந்த பள்ளிக்கல்வித்துறை வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. அதன்படி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளிலிருந்து கசிந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. ஆக்சிலியம் மேல்நிலைப்பள்ளி, ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் இருந்து வினாத்தாள்கள் லீக் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுத் துறையின் வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top