Connect with us

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை குறைத்து பதிவிட கூடாது-மத்திய அரசு

Scheduled Caste And Scheduled Tribes Rights in India

செய்திகள்

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை குறைத்து பதிவிட கூடாது-மத்திய அரசு

இந்தியாவில் தற்போது பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஏனென்றால் பல இடங்களில் அவர்களின் உரிமைகள் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அதன்படி அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளது மத்திய அரசு.

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை குறைத்து பதிவிட கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளில் காவல்துறை முனைப்பாக செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் நம் தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு தொடர்ந்து உன்னிப்பான முறையில் சான்றிதழ்கள், இட வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top