குற்றங்களும் காவல் துறையின் அணுகு முறை ! தெரியாத அறிய தகவல்கள் !

லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பயன்படுத்தப்படுவது தான் லுக் அவுட் நோட்டீஸ்..

LOC எனப்படும் லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறையினர் அனுப்பி வைப்பது வழக்கம். இதன்மூலம், குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றால் அவரை விமான நிலைய காவல்துறையினர் எளிதில் கைது செய்ய முடியும். இந்த லுக் அவுட் நோட்டீஸில் பல வகைகள் உண்டு.

ரெட்கார்னர் நோட்டீஸ்?

அதில் ஒன்றுதான் ரெட் கார்னர் நோட்டீஸ். குற்றம்சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருந்தால் அவர் குறித்த தகவல்களை பெறுவதற்கும், அவரை கண்டறியவும் ரெட்கார்னர் நோட்டீஸ் பயன்படுத்தப்படுகிறது.

ப்ளாக் லுக் அவுட் நோட்டீஸ்?

ப்ளாக் லுக் அவுட் நோட்டீஸ் என்பது அடையாளம் தெரியாத பிணங்களை கண்டறிய இன்டர்போல் சார்பில் வெளியிடப்படுவது ப்ளாக் லுக் அவுட் நோட்டீஸ்.

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் ஊர் சுற்றும் அஜித் ! எப்போ எங்க தெரியுமா?

ப்ளூ கார்னர் லுக் அவுட் நோட்டீஸ்?

குற்றம் தொடர்பான ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்து அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து கூடுதல் தகவல்களை சேகரிக்க சர்வதேச காவல்துறையால் வெளியிடப்படுவது தான் ப்ளூ கார்னர் நோட்டீஸ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment