Connect with us

கிரைம்: 14 வயது சிறுமியின் காதலை எதிர்த்ததால், காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை

156511 death1

செய்திகள்

கிரைம்: 14 வயது சிறுமியின் காதலை எதிர்த்ததால், காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 14 வயது சிறுமியும் 24 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் சிறுமியின் பெற்றோர் பள்ளி படிப்பை முடிக்காத சிறுமி என்பதாலும் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியை கண்டித்த நிலையில் சிறுமியும் அவர் காதலித்து வந்ததாக கூறப்படும் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள காடைஇடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் அருண் (24). இவரும் இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுமி என்பதாலும் மாற்று சமூகம் என்பதாலும் இவர்களது காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் அந்த சிறுமி பெற்றோரின் பேச்சை கேட்காமல் அவர் காதலிக்கும் காதலன் அருண் வாங்கி கொடுத்த செல்போனை அவர் படிக்கும் பள்ளிக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தி அருணுடன் பேசி வந்துள்ளார்.

இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் அவரைக் கண்டித்துள்ளனர். இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமையை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக அந்த சிறுமி வைரிவயலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தையல் கற்றுக் கொள்வதற்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி தையல் கற்றுக்கொள்ள வைரிவயலுக்கு செல்லாமல் அருண் சகோதரியின் திருமணத்திற்கு சென்று அருணும் அந்த சிறுமியை சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அந்த சிறுமி இன்று காலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் திரும்பி வீடு வராததால் அவரை காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியின் வீட்டருகே உள்ள மரத்தில் சிறுமியும் அவர் காதலித்து வந்த அருணும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் இதனை டார்ச் லைட் அடித்து பார்த்து உறுதி செய்துள்ளனர். பின்னர் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகுடி காவல்துறையினர் மரத்தில் தொங்கிய இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயதில் 24 வயது இளைஞர் மீது காதல் ஏற்பட்டு அதனை பெற்றோர் ஏற்க மறுத்து கண்டித்ததால் காதலனுடன் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top