ஷாக் நியூஸ்! கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் தீ விபத்து..!!

உத்தரகாண்டில் நடைபெற்ற தீ விபத்தின் காரணமாக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் விபத்தில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தீ விபத்தில் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊர் செல்வதற்காக டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியது.

அதே சமயம் உடனடியாக தீப்பற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் ரிஷப் பண்ட்க்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.