ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா திட்டவட்டம்!!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடை ஏற்படும் மோதல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் தொடரில் இருநாடுகளுக்கிடையேன எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2023-ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் பாக்கிஸ்தானில் இந்திய வீரர்கள் செல்ல வேண்டும் என பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

இருப்பினும் பாதுகாப்பு மற்றும அரசின் அனுமதி போன்ற பல்வேறு காரணங்களினால் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும், இத்தகைய அறிவிப்பால் பாகிஸ்தான் வாரியம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...