சிறார்களுக்கான தடுப்பூசி-பிரத்யேக மையங்களை உருவாக்க!: மத்திய அரசு

நம் இந்தியாவில் இப்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பலரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

சிறார்களுக்கான தடுப்பூசி

மத்திய அரசின் இத்தகைய உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிறார் தடுப்பூசிக்கான முன் பதிவினை ஜனவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்றும் அறிவித்து இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியினை மட்டுமே செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போட பிரத்தியேக மையங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிறார்களுக்கான கொரோனா  தடுப்பூசி போடுவதற்கு மாநில அரசுகள் பயிற்சியும் தரவேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. கோவாக்சின்  தடுப்பூசியை மட்டும் செலுத்துவதற்கான அறிவுரைகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment