
தமிழகம்
வாட்ஸ் அப் குரூப் மூலமாக கலவரத்திற்கு அழைப்பா?-தீவிர விசாரணை;
கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதிலும் இந்த கலவரத்தின் விளைவாக அங்குள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் எரித்து தீ வைக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் மாற்று சான்றிதழ் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன. அங்குள்ள மேசைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் உயர்நீதிமன்றமும் பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்ததால் கலவரத்தைப் பற்றிய உண்மைத்தன்மை அதிக அளவில் வெளிவந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக வாட்ஸப் குழு அமைத்து கலவரத்தை தூண்டியதாக ஒரு கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த செயலில் ஈடுபட்டதாக நாலு பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
கலவரத்தை தூண்டியதாக இரு சிறுவர் உட்பட சென்னையை சேர்ந்த நாலு பேரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
