Connect with us

அடித்து நொறுக்கிய அதிகனமழையால் சாலை மற்றும் வீடுகளில் விரிசல்..!.

Cracks in road

செய்திகள்

அடித்து நொறுக்கிய அதிகனமழையால் சாலை மற்றும் வீடுகளில் விரிசல்..!.

கூடலூர் பகுதியில் சாலை மற்றும் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு. தமிழக அரசுக்கு விரைவில் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்…

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. அந்த மழையில் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் மழை நின்ற 10 நாட்களுக்கு பின் கூடலூரில் இருந்து உதகை செல்லும் மலைப்பாதையில் சுமார் 70 மீட்டர் நீளத்துக்கு சாலையில் பிளவு ஏற்பட்டு இரண்டு இன்ச் ஆழத்திற்கு சாலை கீழே இறங்கியது.

மேலும் அதே மலை பகுதியில் அடிவாரத்தில் உள்ள நடு கூடலூர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இதில் 7 வீடுகள் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் கடந்த 17-ந்தேதி கோவையை சார்ந்த புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் நிலத்தடியில் நீர் ஓட்டம் ஏற்பட்டதால் விரிசல் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாதிப்புகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்வதற்காக மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய புவியியல்துறை முதன்மை ஆராய்ச்சியாளர் அசரக் அகமத் தலைமையில் வந்த அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பாதிக்கபட்ட வீடுகறை நேரடி ஆய்வு செய்தனர்.

அதில் நிலத்தடியில் என்ன நடந்தது என்பது பற்றி முழு ஆய்வு மேற்கொண்டதாகவும், பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரைவில் தமிழக அரசுக்கும், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கையாக சமர்ப்பிக்கபடும் என்று தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top