பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு! ஒருவர் காயம்;

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் ஒரு சிறப்பு தொழிலை பெற்றுள்ளதாக காணப்படும். அந்த வகையில் விருதுநகர் மாவட்டமானது பட்டாசு தயாரிக்கும் தொழிலை முதன்மையாக கொண்டு காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பட்டாசு உலகம் என்று அழைக்கப்படுகிறது சிவகாசி. இதனை தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்றும் அழைப்பர். இங்கு ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் காணப்படுகிறது.

இவை நம் நாட்டிற்கு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு உதவுகின்றன. இந்த நிலையில் எவ்வளவுதான் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் ஒரு தீப்பொறி பட்டால் போதும் ஒட்டுமொத்த ஆலையும் விபத்து ஏற்பட்டு விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்த விபத்தானது ஆலைக்கு மட்டுமில்லாமல் பணி புரியும் பணியாளர்களின் உயிரை வாங்கும் அளவிற்கு காணப்படும். அதன்படி சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்தில் உயிர் இழப்பு போரின் எண்ணிக்கை கணிசமாக காணப்படுகிறது.

இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது இன்றைய தினம் பதிவாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டா சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ரவி என்பவர் உயிரிழந்துள்ளார். மருந்து உராய்வின் காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.