சிங்கக்குட்டியை ஈன்ற பசு.. என்னடா நடக்குது நாட்டுல..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசு ஒன்று சமீபத்தில் கன்று குட்டியை ஈன்ற நிலையில் அது சிங்கக்குட்டி போல் இருந்ததை பார்த்து பசுவின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரைசென்என்ற மாவட்டத்தில் கோர்க்கா என்ற கிராமம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பசு ஒன்று சமீபத்தில் கன்று ஒன்று ஈன்றது. இந்த கன்றுக்குட்டி சிங்கக்குட்டி போன்றே இருந்ததை பார்த்து அது இயற்கையின் அதிசயம் என்றே அந்த பகுதியில் உள்ள பலர் கூறுகின்றனர்.

அந்த பசு, கன்று குட்டியை ஈன்றபோது அதன் முகம் மற்றும் உடல் அமைப்பு சிங்கக்குட்டி மாதிரி இருந்ததை பார்த்து பசுவின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த கன்றுக்குட்டியை காண்பதற்கு குவிந்தனர்.

cow calf

இது குறித்து கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கன்று குட்டியை ஆய்வு செய்தனர். கன்றுக்குட்டி ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தது.

சிங்க வடிவில் பசு ஈன்ற கன்று குட்டியை ஆய்வு செய்த கால்நடை துறையினர் கருப்பை குறைபாடு காரணமாக இவ்வாறு பிறந்து இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அந்த கிராமத்தினர் பலர் சிங்கத்துடன் பசு உடலுறவு கொண்டிருக்கும் என்றும் அதனால் தான் சிங்கக்குட்டி வடிவில் கன்றுக்குட்டி பிறந்துள்ளது என்றும் கூறுகின்றனர். ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிங்க வடிவிலான கன்று குட்டி பிறந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் அதை அபசகுணமாக கருதி அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த பல்வேறு வதந்திகள் அந்த பகுதியில் பரவி வரும் நிலையில் அந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் பசு ஈன்ற சிங்கக்குட்டியால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.