கொரோனா காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் கோவில் அடைப்பு- வெளியே நின்று தரிசனம் செய்து செல்லும் பக்தர்கள்

கொரோனா காரணமாக புதிய கட்டுப்பாடாக கோவில்கள் வெள்ளி, சனி , ஞாயிறு மட்டும் அடைக்கப்படும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கோவில்கள் மட்டுமல்லாமல் தர்ஹாக்கள் தேவாலயங்கள் போன்றவையும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அடைக்கப்படுகிறது.

கோவில்களை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அடைத்திருப்பதாலும் மற்ற வழிபாட்டுத்தலங்களை அடைத்து வைத்திருப்பதாலும் இன்று முதல் மூன்று நாட்கள் யாரும் கோவில் செல்ல முடியாது வெளியில் இருந்துதான் வழிபட முடியும்.

இன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், சாந்தோம் தேவாலயம் போன்றவற்றுக்கு வந்த பக்தர்கள் வழிபட முடியாமல் திரும்பி சென்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment