கொடநாடு வழக்கில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: பதற வைக்கும் புதிய தகவல்!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடைப்பெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 230-க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

அதே போல் கார் ஓட்டுனர் கனகராஜ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சூழலில் கோடநாடு வழக்கை விரைவில் முடித்துவைக்க வேண்டும் என மனோஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது வந்தது. அப்போது காவல் துறையினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் கிடைத்து இருப்பதாக கூறினார்.

இதன் காரணமாக விசாரணையை விரைந்து முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார். இதனை ஏற்ற நீதிபது விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment