“நான் ஒசில் வர மாட்டேன்… காசு தர்றேன் சீட்ட கொடு”… அமைச்சர் பொன்முடி பேச்சால் வெகுண்டெழுந்த பாட்டி!

கோவையில், அரசு பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர், ஓசி பயணம் செய்ய மாட்டேன் என மூதாட்டி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக அரசுக்கு ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் மகளிருக்கு நகர அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, திமுக ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசியில் பயணம் செய்வதாக கூறினார். இதற்கு பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் மூதாட்டி ஒருவர் “ஓசியில் பயணம் செய்ய மாட்டேன்… காசு கொடுக்கிறேன் சீட்டு கொடு” என வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “காசு வாங்காமல் டிக்கெட் வேண்டாம்… நான் ஓசியில் வர மாட்டேன். தமிழ்நாடே போகட்டும் நான் வர மாட்டேன்… காசு கொடுக்காமல் வர மாட்டேன். காசை பிடிப்பா… டிக்கெட்டிற்கு போக மீதி காசைக் கொடு… ஓசின்னு சொல்லிக்காட்டுறாங்க… டிக்கெட் கொடு நீ… டிக்கெட் கொடுத்தால் தான் வருவேன். காசு இருக்குது… எனக்கு ஓசி தேவையில்லை” என அடம்பிடிக்கிறார்.

மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்த நடத்துநர் இது இலவச பேருந்து டிக்கெட் தர முடியாது என விளக்குகிறார். ஆனால் மூதாட்டி தொடர்ந்து மறுப்பதால், ரூ.15 மதிப்புள்ள டிக்கெட்டை காசு வாங்கிக்கொண்டு நடத்துநர் டிக்கெட் தரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment