உச்சகட்ட பதற்றம்: ‘குண்டர் சட்டம் பாயும்’… கோவை கமிஷனர் எச்சரிக்கை!

சமூக விரோத குற்ற செயல்களில்  ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கமான பரபரப்பை கடந்து பதட்டத்துடன் கலந்த பரபரப்பை கடந்த மூன்று நாட்களாக கோவையில் காண முடிகின்றது. அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதங்களும் சமூக விரோத செயல்கள் இந்த பதட்டத்துக்கு காரணாமாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நேற்று முன்தினம் செப்டம்பர் 22 வழக்கத்துக்கு மாறான நாள். இந்து முன்னணி முக்கிய நிர்வாகியாக விளங்கிய சசிகுமார் படுகொலை நடந்த தினம் இது. அதே போன்று என் ஐ ஏ அதிகாரிகள் நடத்திய ரெயிடில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி மீது எஸ் சி எஸ் டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது போலீசார் கைது செய்திருந்தனர். பெரும் பரபரப்பான கோயமுத்தூர் பதட்டத்தத்தின் உச்ச நிலையை அன்று இரவே தொட்டது. இரவு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் வலது புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

பாஜக அலுவலகத்தின் வலதுபுறம் உள்ள டிரான்ஃபார்மில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அன்று இரவே ஒப்பன்னகார வீதி மாருதி சில்க் எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் நேற்று முந்தினம் இரவு கோயமுத்தூரில் பதற்றம் பற்றிக்கொண்டது. பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று இரவே கோயமுத்தூர் மாநகரம் முழுவதும் வாகன தணிக்கை, லாட்ஜியில் தங்கியிருப்போரை கண்காணிப்பது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

காவல் துறை ஒருபுறம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் மறுபுறம் சமூக விரோதிகள் குற்ற செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். நேற்று காலை நூறடி ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டறியப்பட்டது. நூறு அடி ரோடு ரத்னபுரி பாஜக மண்டல தலைவர் மோகனுக்கு சொந்தமான வெல்டிங் கடையில் நேற்று முன் தினம் இரவே வீசப்பட்ட பெட்ரோல் குண்டு காலையில் கண்டனர்.

இது குறித்து சிட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகரில் பற்றிய பதட்டம் புற நகரையும் விட்டுவைக்கவில்லை. நேற்று முந்தினம் இரவே பாஜக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொன்னுராஜு மற்றும் பொள்ளாச்சி குமரன் நகர் சிவா, சரவணன் உள்ளிட்டோர் வீடுகள் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் 2 கார், 2 ஆட்டோ சேதமடைந்தன. அன்றே மேட்டுப்பாளையம் பகுதியில் மதன்குமார் , சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தன.

இந்நிலையில் குனியமுத்தூரில் உள்ள இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகு கார் நேற்று மதியம் மர்ம நபர்களால் தீ வைத்திருக்கின்ற்னர். அதே பகுதியை சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பிரபு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டன. மீண்டும் நேற்று இரவு கோவை புதூரில் வசிக்கின்ற அனந்த கல்யான கிருஷ்ணன் என்ற சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரளா கேந்திர பொறுப்பாளார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது அடுத்தடுத்து அரங்கேறும் குற்ற சம்பவங்களால் வழக்கத்துக்கு மாறான பதட்டமான கோயமுத்தூர் போலிஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்திருக்கின்றன. ஏடிஜிபி தாமரை கண்ணன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் கோயமுத்தூரில் நடந்திருக்கின்றன.

Image

காவல் துறை அதிகாரிகள் முகாமிட்டு குற்ற செயல்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் ஒருபுறம் அணிவகுப்பு நடத்தி வருகின்ற நிலையில் மறுபுறம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 ஆயிரம் போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

400 அதிவிரைவு படை வீரர்களும் களமிறக்கப்பட்ட ஒட்டுமொத்த கோயமுத்தூரும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்திருக்கின்றன. பொள்ளாச்சி, மேட்டுபாளையம் பகுதிகளிலும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவொர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். இந்து இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

இந்த சமூக விரோத செயல்களை செய்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். வாகன தணிக்கை, சி சி டி ஆய்வு, லாட்ஜில் புதிதாக வந்து தங்கியவர்கள் என விசாரணை வட்டம் விரிவாகியிருக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment