கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் உட்பட 4 பேர் ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் பள்ளி தொடர்பான கண்காணிப்பு காட்சிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த 38 நாட்களாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற ஒரு கேள்வியை முன் வைத்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் அமர்வுக்கு வந்தது.

அப்போது தாளாளர் மற்றும் ஆசிரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவியின் உடற்கூறு ஆய்வு இரண்டுமுறை நடைபெற்று இருப்பதாகவும், இருப்பினும் தங்கள் மீது எந்த வித அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை என வாதிட்டார்.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். அதே சமயம் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறினார்.

அப்போது பேசிய நீதிபதி இந்த வழக்கின் காவல்துறையின் நிலைபாடு என்ன? அதோடு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார். மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நாளை மறுதினம் காரணத்தை தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைமறுதினம் ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment