நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஷால் ‘மருது’ திரைப்படம் தயாரிப்பதற்காக கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் நடிகர் விஷால் வாங்கியிருந்தார். இந்நிலையில் திருப்பி செலுத்த முடியாத சூழலில் தயாரிப்பு நிறுவனமான லைகாவை நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளுமாறு நடிகர் விஷால் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் அந்நிறுவனம் 21 கோடியே 29 லட்சம் கடனை வட்டியுடன் சேர்ந்து தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்தது. அதன் படி, 2020 மார்ச் மாதத்தில் 7 கோடியும், 2020 டிசம்பர் மாதத்திற்குள் மொத்த தொகையும் தெரிவித்திருந்தது.

குறிப்பாக விஷால் பெற்றிருந்த கடன் தொகையை லைக்கா நிறுவனம் செலுத்தும் என்றும்  அதோடு விஷால் நடிக்கும் படங்கள் அனைத்து லைக்கா நிறுவனம் வெளியிடும் என கூறப்பட்டது. ஆனால் ஈரமே வாகைசூடும் படத்தை வெளியிட  தாயாரான நிலையில் இதற்கு  தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதோடு வட்டியுடன் சேர்த்து ரூ.30 கோடியை நடிகர் விஷால் செலுத்த வேண்டுமென லைக்கா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு ரு. 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. இதற்கிடையில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் தனக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக பணத்தை செலுத்த முடியவில்லை என கூறினார்.

அப்போது பேசிய நீதிபதி, நீங்கள் படத்தில் நடித்து வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்தலாம் என கேள்வி எழுப்பினார். பின்னர் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.