பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாட உயர் நீதிமன்றம் தடை…!

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி  வழக்கு.. பிறந்தநாள் விழா என்றால் நலத்திட்ட உதவிகள் வழங்கலாம் இனிப்பு வழங்கலாம் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. -நீதிபதிகள் கருத்து

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு.

எங்களது கிராமத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் குதிரை வண்டி பந்தயம் ஆகியவை நடத்த முடிவு செய்துள்ளோம் இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்  அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம் இதுவரை அனுமதிக்கவில்லை எனவே பிரதமரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு நீதிபதி மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி  மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கான அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில்  முக்கிய நிர்வாகிகள் விஐபிகள் கலந்து கொள்வதால் அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது தான் அதில் பாரபட்சம் கூடாது பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்டங்கள் வழங்கலாம் இனிப்பு வழங்கலாம் மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பது கிடையாது என கூறி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுத்து விட்டனர்

மேலும் மனு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment