ஜெய் பீம் பட பாணியில் கொல்லப்பட்ட வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2012 ஆம் ஆண்டில் நித்தியராஜ் என்பவர் காதல் ஜோடிகளின் செல்போன் பறித்ததாக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர்கள் அவரை பார்க்க அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ராயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இவரது மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இதுதொடர்பாக வழக்கின் விசாரணையின் அமர்வானது இன்று வந்தபோது நித்தியராஜ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் சுமார் 5 லட்சம் வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் இவரது மரணம் குறித்து சிபிஐ போலீசார் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment