
செய்திகள்
3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் நாடு!!- அதிருப்தியில் மக்கள்?
உலகில் உள்ள ஒரு நாடு தங்கள் நாட்டு மக்களிடமே மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது உலக அளவில் காட்டுத் தீ போல் பரவியது. இது வேறு எந்த நாடும் கிடையாது மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீன நாடு தான்.
ஏனென்றால் சீனாவில் உள்ள தம்பதிகள் மூன்று குழந்தைகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீன அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கருத்தடையை அமல்படுத்தியதும் சீன அரசு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கூட மக்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதன் காரணமாக இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன. மேலும் இளம் வயதிலேயே மக்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் முயற்சியிலும் சீன அரசு இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது.
இருப்பினும் கூட பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் தற்போது அங்கு காணப்படுகின்ற கொரோனா சூழல், நிதி பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை இவற்றின் மத்தியில் மூன்று குழந்தைகள் என்றால் யோசிக்கும் நிலையில் தான் மக்கள் காணப்படுகின்றனர். இதனால் அரசின் இத்தகைய அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
