Connect with us

நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! 268 மையங்கள் அமைப்பு;

vote counting6

தமிழகம்

நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! 268 மையங்கள் அமைப்பு;

நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! 268 மையங்கள் அமைப்பு;

சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் ஒரு சில இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனால் நாளைய தினம் முழுவதும் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. 12838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான நிலையில் நடந்துமுடிந்தது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. 14 மேஜைகள் போடப்பட்டு சுற்றிலும் கம்பி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது.

வாக்கெண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் அமர தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் எந்திர துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு பெட்டிகள் இருக்கும் கட்டடங்களை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சுற்றுப்பகுதிகளில் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறை, போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து முடித்து தயார் நிலையில் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top