கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளசாராயம் குடித்த 12 பேர் இறந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.