கள்ளச்சாராயம் விவகாரம்: நேரில் பார்த்த பிறகு முதலமைச்சர் போட்ட உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த இயக்கியர் குப்பம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பம்பாமேடு என்ற இடத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார் .

அதை தொடர்ந்து அந்த மருத்துவ கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ,பின்னர் பேட்டியளித்த அவர் மதுவில் மெத்தனால் கலந்ததாலேயே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு மெத்தனால் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார் ,மேலும் விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

“2 ஆண்டு திமுக ஆட்சிக்கு, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி”: அண்ணாமலை விமர்சனம்

இது குறித்து அவர் கூறியதாவது “இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி இதற்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டிருக்கிறது ,இது தவிர தொழிற்சாலைகள் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் பொருட்டு இப்ப பிரச்சனை மூல காரணத்தை கண்டுபிடித்து ஒளித்து விட ஏதுவாக இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பனை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் கள்ளச்சாராய் விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சரம் என்று நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் இரு சம்பவங்களிலும் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக முதலமைச்சராக அறிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.