Connect with us

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல்: முக்கிய அறிவிப்பு!

education department

செய்திகள்

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல்: முக்கிய அறிவிப்பு!

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல்: முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலருக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்தாய்வு அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் இதில் பணி மாறுதல் வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்து பணியிடங்கள் காலி பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top