எந்த ஊரு கல்வி ஆண்டிலும் இல்லாத வகையில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது மே மாதம் தான் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வுகள் முடிவு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.இதில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் இந்த முறை பெற்றுள்ளது.
இந்த நிலையில் அடுத்தடுத்து 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி கல்லூரிக்காக மாணவ, மாணவிகள் காத்துக் கொண்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு பற்றி தகவல்களை எடுத்துக் கொண்டு வருகிறது.
இதன் மத்தியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றைய தினம் முதல் கலந்தாய்வு தொடங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வு நேரடி முறையிலேயே நடைபெறுகிறது. 163 கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.