இவ்வளவு போராடியும் “பிளே ஆஃப்க்குள்” நுழைய முடியவில்லையே!!!
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது மொத்தம் 8 அணிகள் களமிறங்கி உள்ளன. அதில் முதல் நான்கு அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழையும்.
அந்த வரிசையில் முதலாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. அதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இந்த நிலையில் தற்போதைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியோடு பலப்பரீட்சை மேற்கொண்டது.
மேலும் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 235 ரன்களை அடித்து இருந்தது. மேலும் மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 84 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும் எடுத்திருந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்களை எடுத்திருந்தது. மேலும் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 69 ரன்களை அடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தனது ஆக்ரோஷத்தை காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியாவது பிளே ஆஃப்க்குள் நுழைந்து விடலாம் என்று முயற்சி செய்தது. ஆனால் போட்டியின் முடிவில் நெட் ரன் ரேட்களின் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5வது இடத்தை பிடித்துள்ளது.
இதனால் கொல்கத்தா அணியானது நான்காவது இடத்தினை தக்க வைத்து தற்போது பிளே ஆஃப்க்குள் உறுதியாக நுழைந்துள்ளது.இதனால் கடைசி வரை போராடியும் பிளே ஆஃப்க்குள் நுழைய முடியாமல் மும்பை இண்டியன்ஸ் அணி இந்த ஆண்டு தொடரை நிறைவு செய்துள்ளது.
