Connect with us

எகிறும் பஞ்சு,நூல் விலை: வியாபாரிகள் 2 நாள் வேலை நிறுத்தம் !!

cotton price

Tamil Nadu

எகிறும் பஞ்சு,நூல் விலை: வியாபாரிகள் 2 நாள் வேலை நிறுத்தம் !!

கோவை, திரூப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்படி திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்களும் சேலத்தில் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் சுமார் 10 ஆயிரம் வார ஜவுளி சந்தைகள் மொத்தம், சில்லறை கவுளி கடைகள் மூடப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஈரோட்டில் 25-க்கும் அதிகமாக தொழிற்சங்கள்கள் கடையடைப்பில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறையினர் பெரும் சிக்கல்களை சந்தித்து வருவதாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதோடு ஜவுளித் துறையின் துயர் தீர்க்க விரைந்து தீர்வுகளை காண வேண்டும் என்றும் பருத்திக்கான இறக்குமதி வரிச் சலுகை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்றும் பஞ்சு, நூல் விலையினை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top