
தமிழகம்
நூல் விலை உயர்வு: இன்று திருப்பூரில் தொடங்கியது ஸ்ட்ரைக்..!!
இன்றைய தினம் மேற்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, கோயம்புத்தூரில் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் 4000 கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திலும் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நெசவுத் தொழிலுக்கு பேர் போன திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து தொடங்கியுள்ளது. நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடை தொழில்நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கின.
நூல் விலை இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்து ரூபாய் 470 வரை விற்கப்படுவதால் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி பதுக்கலை கண்டறிந்து அத்தியாவசிய பொருள் பட்டியலில் பருத்தியை கொண்டு வர கோரி ஸ்ட்ரைக் தொடங்கியுள்ளது.
பின்னலாடை நிறுவனங்களின் ஸ்டிரைக்கால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 300 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
