சந்தேகமே இல்லை ‘ஊழல்’ தான் பொருளாதாரத்தையும்,வளர்ச்சியும் சீர்குலைகிறது!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது போல நம் நாட்டில் பல பகுதிகளில் அதிக அளவு ஊழல் காணப்படுகிறது.  பல சான்றிதழ்கள் வாங்குவதற்குக் கூட லஞ்சம் அளிக்கும் செயல் நம் இந்தியாவில் அதிகமாக உள்ளது.ஐகோர்ட் மதுரை

இது குறித்து தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை பல கருத்துக்களை கூறியுள்ளது. அதன்படி ஊழல்  நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.

எளிமையானது என்பதால் தான் சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அரசு துறைகளில் நடக்கும் ஊழல் சட்டவிரோதம் பற்றி கண்காணிக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் இதே கருத்தினை கூறி உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு  பல மாதங்களுக்கு முன்னர் நம் நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளது குறித்து வேதனையோடு கருத்து தெரிவித்திருந்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவ்வாறு இருப்பினும் தொடர்ச்சியாக நாட்டில் ஊழல் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment