Connect with us

மின்சார பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல்!! சிபிஐ விசாரிக்க ஆளுநர் ஒப்புதல்;

electric bus11 1

செய்திகள்

மின்சார பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல்!! சிபிஐ விசாரிக்க ஆளுநர் ஒப்புதல்;

மத்தியில் டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக ஆம்ஆத்மி கட்சி திகழ்ந்து கொண்டு வருகிறது. டெல்லி மட்டுமின்றி அருகே உள்ள பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி ஆதிக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள சில திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றுள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி முறையிலான திட்டம் நம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு மின்சார பேருந்துகள் திட்டம் அமலுக்கு வந்தது.

இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சிகள் சில புகார் அளித்துள்ளதாக தகவல் கிடைத்ததுள்ளன. அதன்படி டெல்லியில் மின்சார பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்களில் ஊழல் குறித்த புகார் மீது சிபிஐ விசாரிக்க ஆளுநர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

சுமார் 1000 மின்சார பேருந்துகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் புகார் அளித்துள்ளன. மின்சார பேருந்து கொள்முதல் குறித்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி கட்சி விளக்கம் தந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top