தமிழகம் முழுவதும் அலசி ஆராய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை! கையில் சிக்கியது கணக்கில் இல்லாத பணம்!!

தமிழகத்தில் சில நாட்களாகவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை அதிகமாகவே காணப்படுகிறது. இவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் காணப்பட்டாலும் தற்போது தமிழகம் முழுவதுமே சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.லஞ்சம்

அதன்படி தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குமரி-மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையில் ரூபாய் 1.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வச்சகாரப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 1.53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லட்சம் தேனி மாவட்டம்  அல்லிநகரம் நகராட்சியில் தென்மண்டல டிஎஸ்பி கருப்பையா தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிகழ்த்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் 25 ரூபாய் பறிமுதல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் சோதனை நடத்தியது தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment