அதிமுக ஆட்சியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைத்ததில் ஊழல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
அதிமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அத்ததில் 64 லட்சம் ஊழல் நடைபெற்றதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதில் செயற்பொறியாளர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றங்களில் இருந்து மீனவ குடும்பங்களை காப்பாற்றுவதற்காக கடலரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்றது.
இதில் கடந்த அதிமுக ஆட்சியில் இறைவை புத்தன் துறையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இந்தப் பணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதில் 16 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கற்கள் கணக்கில் வைக்கப்பட்டது. ஆனால் 475. 44 மெட்ரிக் டன் கற்கள் மட்டுமே கொட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 64 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லட்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக அப்போது கன்னியாகுமரிக்கு செயற்பொறியாளராக இருந்த கிருஸ்து நேசகுமார் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
