Connect with us

இபிஎஸ்க்கு எதிரான ஊழல் வழக்கு: ஆர்.எஸ்.பாரதிகூடுதல் மனு தாக்கல்!!!

பழனிச்சாமி

தமிழகம்

இபிஎஸ்க்கு எதிரான ஊழல் வழக்கு: ஆர்.எஸ்.பாரதிகூடுதல் மனு தாக்கல்!!!

அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த இபிஎஸ் அவர்கள் சாலை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு கொடுத்து ஊழலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில் இபிஎஸ்-க்கு எதிராக கூடுதலாக ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக இபிஎஸ் செய்த இத்தகைய செயலானது உலக வங்கியில் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் எதிரானது என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இபிஎஸ்-ன் இத்தகைய செயலால் அதிக விலைக்கு அரசு ஒப்பந்தங்களுக்கு கொடுக்க நேர்ந்ததாகவும் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட அதிகாரிகளை சரியாக செயல்பட விடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தான் சிக்க கூடாது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் அழித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top