கொடூரத்தின் உச்சகட்டம்!! வாயில் துணி… பாலித்தீன் கவரில் தொழிலதிபர் சடலம்!!

சென்னையில், பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட நிலையில் தொழிலதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் அடுத்த நெற்குன்றம் பகுதியில் இருக்கும் சாலையில் இன்று அதிகாலை பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விசாரணை நடத்தியதில் சென்னை ஆதம்பாக்கத்தில் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன் என்பது தெரியவந்துள்ளது. அதே போல் அவரது வங்கி கணக்கில் இருந்து அதிகப்படியான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சொத்து பிரச்சனையா? அல்லது தொழிலில் போட்டியா? போன்ற பல கோணங்களில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment