நம் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகின்ற கடைகளில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. இதனால் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அந்த கடையில் சீல் வைக்கும் முறையை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுகின்றனர்.
அதிலும் குறிப்பாக வரைமுறை இன்றி பிளாஸ்டிக் கவர்கள் உபயோகித்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கெட்டுப் போன அழுகிய உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு அந்த ஹோட்டல்களின் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் தற்போது சென்னை பாரி முனையில் 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை பாரிமுனை அருகே ரத்தம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
ஏனென்றால் வாடகை செலுத்தாத அந்த 130 கடைகளுக்கும் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துக் கொண்டு வருகின்றனர். ரூபாய் 40 லட்சம் நிலுவை உள்ள நிலையில் நோட்டீஸ் வழங்கிய பின்னரும் அவர்கள் வாடகை செலுத்ததால் மாநகராட்சி இத்தகைய நடவடிக்கை எடுத்து சீல் வைத்துக் கொண்டு வருகிறது.