மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்: என்ன காரணம்?

பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் வீடு சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ளது என்பதும் அந்த வீட்டில் அவர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சென்று அவரது வீடு அரசு புறம்போக்கு நிலமாக 2,500 சதுர அடி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறிய சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் அரசியலில் இருந்து வருகிறார் என்றும் கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்த அவர், சமீபத்தில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment