நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் அந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் சற்று உயர தொடங்கியதாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகளின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
22000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் மேலும் 4 பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தியுள்ளது மாநகராட்சி. சென்னையில் 11 இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் நாளை முதல் 15 இடங்களில் பரிசோதனை மையங்கள் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.