உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இருப்பினும் கொரோனாவின் தாக்கத்தை இன்னும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் வெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இது தொடர்பான ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை எலிகள் மூலம் 50 பேருக்கு வைரஸ் தொற்று பரவியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 2200 வெள்ளை எலிகள் அழிக்கப்பட்டன. மேலும், வெள்ளை எலிகளுக்கு டெல்டா வைரஸ் பரவியது ஹாங்காங் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.