2022ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் ஆளுநர் ரவி வணக்கம் கூறி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அங்கு அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமில்லாமல் ஆளுநர் ரவி பல முக்கிய அறிவிப்புகளை உரையாடினார்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாள் மட்டுமே நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை வரை இரண்டு நாள் மட்டுமே நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் இரண்டு நாட்கள் மட்டுமே கூட்டத் தொடர் நடக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதம் நடக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஏழாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரம், முதல்வர் பதில் உரையை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். கொரோனாவின் வேகம் அச்சத்தை தருவதால் இரண்டு நாளில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிக்கப்படுகிறது என்றும் தமிழக சபாநாயகர் கூறினார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.