தற்போது நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாட்டு விதிகளும் மெல்லமெல்ல திரும்ப பெறப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் மக்களின் இயல்பான வாழ்க்கை மீண்டும் திரும்பி உள்ளதாகவும் காணப்படுகிறது.
இத்தகைய சூழலில் சில வாரங்களுக்கு முன்பு கான்பூர் ஐஐடி ஜூன் மாத இறுதியில் கொரோனாவின் நான்காவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் அதிதீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வர இருக்கின்ற நான்காம் அலையை தடுக்க தடுப்பூசி கட்டாயம் அவசியம் என்று கூறினார்.
இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் கொரோனாவின் நாலாவது அலை ஏற்படும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் நாலாவது அலை பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று மக்கள் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் உக்ரேனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர தமிழக அரசு கவனம் செலுத்தி கொண்டு வருகிறது என்றும் கூறினார்.