கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் அதிகமாக பரவியுள்ளது. இந்தியாவில் இது வேகமாக பரவி வருகிறது.
இந்திய பிரபலங்கள் பலருக்கும் கூட கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
இப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்று எல்லோரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்தியாவின் பார்லிமெண்ட் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது சோதனையில் தெரிய வந்துள்ளது.
விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கும் நிலையில் இப்படி நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.