
News
பல ஆபத்தான உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்? பில்கேட்ஸ் எச்சரிக்கை;
2019 ஆம் ஆண்டு முதல் நம் உலகில் கொரோனாவின் பரவல் கண்டறியப்பட்டது. இந்த கொரனோ நோயின் தாக்கம் தற்போது வரையும் அதிதீவிரமாக காணப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட இந்த நோய் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
இந்த நிலையில் பலரும் கொரோனா பற்றி எச்சரிக்கை விடுத்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வரிசையில் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி மேலும் பல ஆபத்தான உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உருவாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இதன் மோசமான நிலை இன்னும் வெளிப்படவில்லை என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
தீவிரமான மாறுபாடான தொற்றுக்கான ஆபத்து 5 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என்றும் கூறினார். 2015 ஆம் ஆண்டிலேயே அடுத்த பெருந்தொற்று பரவலுக்கு உலகம் தயாராகவில்லை என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
