ரெடியா ஆகிட்டிங்களா குழந்தைகளே.. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி திட்டம்!

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்கும் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இந்தியாவில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனாத் தடுப்பூசியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. கொரோனாத் தடுப்பூசியின் ஓராண்டு நிறைவில் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தி இந்திய அரசு சாதனை செய்துள்ளது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், போலீஸ்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என முன் களப் பணியாளர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் துவங்கி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதன்பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கியது.

இந்தநிலையில் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கி 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு இந்த திட்டத்தை பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத் துவக்கத்தில் செயல்படுத்த கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசியை 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் திட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய குழந்தை மருத்துவ அகடாமி முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் பிரமோத் ஜோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.