இன்னும் நாற்பது நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக ஜனவரியில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனா உட்பட ஆசிய நாடுகளில் தற்போது மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது என்பதும் இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து பயணிகள் முழுவதுமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 39 வேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாகவும் இவர்களுக்கு உரு மாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும் அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது என்றும் மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக பல பிரச்சனைகள் எழுந்ததை அடுத்து இந்த முறை சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.