சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காத அளவில் பரவி வருவதாகவும் ஆனால் சீனா உண்மையை உலக நாடுகளுக்கும் மறைத்து வருவதாகவும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில்தான் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா vஐரஸ் இரண்டு அலைகளால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் பொருளாதாரமே சீரழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தான் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் காட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கோரத் தாண்டவமாடி பல உயிர்கள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பை சீனா மறைத்தது போல் தற்போது மீண்டும் மறைத்து வருவதாகவும் உலக நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.
சீனாவின் உண்மை நிலை குறித்து உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனா விடாப்பிடியாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் இருக்கிறது என்று தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் சுதாரித்து தற்போது அதிரடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்வரை கொரோனாவால் மட்டும் 5000 பேருக்கும் மேலாக உயிரிழந்ததாகவும் பலியான உடலை எரிப்பதற்காக அந்நாட்டில் சுடுகாட்டில் வரிசையில் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.